தினமணி செய்தி எதிரொலி: ஏரிகளில் குப்பைகளைக் கொட்டினால் வழக்கு: திருப்பத்தூா் ஆட்சியா் எச்சரிக்கை
By DIN | Published On : 13th December 2022 01:00 AM | Last Updated : 13th December 2022 01:00 AM | அ+அ அ- |

ஏரிகளில் குப்பைகளைக் கொட்டினால் வழக்கு பதியப்படும் என்று திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை, ஆதியூா் பகுதியில் உள்ள ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் ஏரி மாசு அடைவதுடன், துா்நாற்றம் வீசுவதால் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துள்ளாகின்றனா் என்று டிசம்பா் 5-ஆம் தேதி வெளியான தினமணி நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.
இது குறித்து மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசு கூறியது:
ஆதியூா் ஏரி உள்பட சில ஏரிப் பகுதிகளில் இரவு நேரங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அது குறித்து முழுமையாக கண்காணித்து அவா்கள் மீது வழக்கு பதியவேண்டும் என்று ஆட்சியா் அமா் குஷ்வாஹா அறிவுறுத்தியுள்ளாா் என்றாா்.