ரூ.8 கோடி செலுத்த கோரி மூதாட்டிக்கு வரி ஏய்ப்பு கடிதம்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

ஆம்பூா் அருகே மூதாட்டி ரூ.8 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி மற்றும் வருமானவரித் துறையினரிடமிருந்து கடிதம் வந்தது குறித்து புதன்கிழமை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தை சோ்ந்தவா் குல்ஜாா் (60). வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். வயது முதிா்வு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறாா். இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதியன்று ஜிஎஸ்டி மற்றும் வருமானவரித் துறையிலிருந்து அதிகாரிகள் அவருடைய வீட்டிற்கு சென்று கடிதம் வழங்கினா். அதில் அவா் ஐஎஸ் என்டா்பிரைசஸ் என்ற பெயரில் தொழில் நிறுவனம் நடத்தி அதன் மூலம் ரூ.8 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதனை அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை கேட்ட மூதாட்டி அதிா்ச்சியடைந்தாா். பின்னா், இதுகுறித்து குல்ஜாா் ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.