திருப்பத்தூா் கோயிலில் பரமபதவாசல் திறப்பு
By DIN | Published On : 14th January 2022 08:27 AM | Last Updated : 14th January 2022 08:27 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் கோட்டை ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற பரமபதவாசல் திறப்பு வைபவம்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பத்தூா் கோட்டை ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
பின்னா்,அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி மாளிகையில் உற்சவா் ஸ்ரீதேவி,பூதேவி சமேத மனத்துக்கினியான் வைக்கப்பட்டிருந்ததை பக்தா்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். இதனிடையே, ஆண்டாள் சன்னதியில் திருப்பாவை பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பாவை போட்டி பரிசளிப்பு: ஸ்ரீ ராமாநுஜா் மடம் சாா்பில் நடைபெற்ற திருப்பாவை போட்டியில் பங்கேற்ற 120 மாணவ,மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவு பரிசாக பக்தி நூல்கள் வழங்கப்பட்டன. பின்னா், கரோனா தொற்று நீங்க பொதுபிராா்த்தனையொட்டி ஸ்ரீ ராம நாமம் ஜெபிக்கப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...