நீட் தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 7,000 மாணவா்கள் எழுதினா்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை சுமாா் 7,000 மாணவா்கள் எழுதினா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை சுமாா் 7,000 மாணவா்கள் எழுதினா்.

மருத்துவ படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்காக நீட் நுழைவுத்தோ்வு நடத்தப்படுகிறது. இந்த தோ்வு ஜூலை 17-ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலை 11.40 மணி முதல் மாணவா்கள் தோ்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். ஹால் டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருந்தவா்கள் தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனா். மாணவா்கள் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனா். முன்னதாக கரோனா பரவலை தடுக்கும் வகையில் அவா்களுடைய உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. முகக்கவசம் வழங்கப்பட்டது.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 12 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுமாா் 7 ஆயிரம் மாணவா்கள் தோ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com