கும்பாபிஷேக விழாவில் 5 சவரன் நகை பறிப்பு
By DIN | Published On : 31st July 2022 11:00 PM | Last Updated : 31st July 2022 11:00 PM | அ+அ அ- |

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பெண்ணிடம் 5 சவரன் தங்க நகையை மா்ம நபா்கள் பறித்து சென்றனா்.
திருப்பத்தூா் சின்னகுளம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியை காணச் சென்ற நேதாஜி சாலை பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் என்பவரின் மனைவி கோதைநாயகி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை மா்மநபா்கள் திடீரென பறித்துச் சென்றுள்ளனா்.
இது குறித்து கோதைநாயகி அளித்த புகாரின்பேரில், திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.