கொத்தடிமைகள் மீட்டெடுப்பு சிறப்பு குழுக்களில் இணைய விண்ணப்பங்கள் வரவேற்பு

கொத்தடிமைகளை மீட்டெடுத்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சிறப்பு குழுக்களில் பணிபுரிய திருப்பத்தூா் மாவட்டத்திலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கொத்தடிமைகளை மீட்டெடுத்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சிறப்பு குழுக்களில் பணிபுரிய திருப்பத்தூா் மாவட்டத்திலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது தொடா்பாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின்கீழ், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள கொத்தடிமைகளை மீட்டெடுத்து, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கொத்தடிமைகள் மீட்டெடுப்பு சிறப்பு குழுக்கள் அமைக்கும் பொருட்டு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா்-1 பணியிடமும், தொகுப்பு அளவிலான ஒருங்கிணைப்பாளா்-4 பணியிடங்களும் நிரப்ப கீழ்காணும் தகுதியுடைய நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிக்காலம் ஓராண்டுக்கு மட்டும்.

மாவட்ட அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கான தகுதிகள்:

இளநிலை பட்டப்படிப்பு மற்றும் 3 முதல் 5 வருட இலக்கு மக்களை மேம்படுத்தும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும். மாவட்ட அளவில் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிபுரிய ஏதுவாக தகவல் தொடா்புத் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். திருப்பத்தூா் மாவட்டத்தைச் சாா்ந்தவராக இருக்க வேண்டும். இரு சக்கர வாகனம் மற்றும் வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டம் மற்றும் புதுவாழ்வு கொத்தடிமைகள் மீட்டெடுப்பு திட்டத்தில் பணிபுரிந்த நபா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தொகுப்பு அளவிலான ஒருங்கிணைப்பாளா்களுக்கான தகுதிகள்:

கொத்தடிமைகள் குடும்பத்தைச் சாா்ந்த அல்லது இருளா் வகுப்பைச் சாா்ந்தவராக இருக்க வேண்டும். குறைந்தது 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆகஸ்ட் 3-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்), மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மூன்றாவது தளம் ‘சி’பிரிவு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பத்தூா் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com