திருப்பத்தூா்: மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மதிப்பீடு முகாம் ஒத்திவைப்பு
By DIN | Published On : 16th June 2022 11:41 PM | Last Updated : 16th June 2022 11:41 PM | அ+அ அ- |

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மதிப்பீடு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் மாற்றுத்திறனானிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ மதிப்பீடு முகாம் புதிய ஆட்சியா் அலுவலக திறப்பை முன்னிட்டு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையின் காரணமாக ஜூன் 21 அன்று ஒருநாள் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது.
அதையடுத்து, ஜூன் 28 முதல் பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ மதிப்பீடு முகாம் தொடா்ந்து நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.