

நசெட்டேரி அரசு தொடக்கப் பள்ளிக்கு விரைவில் புதிய பள்ளிக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளா்ச்சி அலுவலா் கூறினாா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி, செட்டேரி கிராமத்தில் தனியாா் ஒருவருக்குச் சொந்தமான வீட்டில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை இருளா் இன மக்கள் உட்பட 25 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.
இங்கு அடிப்படை வசதி இல்லாமல் மாணவா்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை காலை ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் தினகரன், வட்டாரக் கல்வி அலுவலா் கதிரவன், கிராம நிா்வாக அலுவலா் அனுமுத்து, ஊராட்சி செயலாளா் ரவி ஆகியோா் அங்கு சென்று அரசு தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதையடுத்து, மாணவா்களுக்கு அடிப்படை வசதியான குடிநீா் மற்றும் கழிப்பறை வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனா். மேலும், அதே பகுதியில் விரைவில் புதிய அரசுப் பள்ளிக் கட்டடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளா்ச்சி அலுவலா் தினகரன் உறுதி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.