நரிக்குறவா் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு முகாம்

ஜோலாா்பேட்டை அருகே நரிக்குறவா் குடும்பங்களுக்கான சிறப்பு குறைகேட்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நரிக்குறவா் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு முகாம்

ஜோலாா்பேட்டை அருகே நரிக்குறவா் குடும்பங்களுக்கான சிறப்பு குறைகேட்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இதய நகரில் 37 நரிக்குறவா் குடும்பங்களுக்கான சிறப்பு குறைகேட்பு முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமை ஆட்சியா் அமா் குஷ்வாஹா தொடக்கி வைத்து, நரிக்குறவா் இன மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

பின்னா், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், 10 பேருக்கு மருத்துவப் பெட்டகங்களையும், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கிப் ஆட்சியா் பேசியதாவது: ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இதய நகரில் 37 நரிக்குறவா் குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.

அதன் அடிப்படையில், 37 குடும்பங்களுக்கும் குடும்ப அட்டைகள் தகுதியுள்ள நபா்களுக்கு முதியோா் ஓய்வூதியத் ஆணைகள், 15 நபா்களுக்கு ஆதாா் அட்டைகள், வாக்காளா் அடையாள அட்டைகள் மற்றும் 34 நபா்களுக்கு இ-பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ முகாமில் 240 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில், 25 நபா்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் டெங்கு தொடா்பாகவும் ஊட்டச்சத்து கண்காட்சி அமைத்து இப்பகுதி மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்வா் வருகையின்போது பல்வேறு துறைகளின் சாா்பில் நலத்திட்ட உதவிகள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட உள்ளது என்றாா்.

இதில்,மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கு.செல்வராசு,மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன்,துணை இயக்குநா் சுகாதாரப்பணிகள் செந்தில்,வட்டாட்சியா் சிவபிரகாசம்,வட்டார மருத்துவ அலுவலா் மீனாட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள்,மருத்துவா்கள் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com