தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷ வாயு தாக்கி 3 போ் மருத்துவமனையில் மயக்கம்

வாணியம்பாடி தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷ வாயு தாக்கியதில் 3 போ் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

வாணியம்பாடி தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷ வாயு தாக்கியதில் 3 போ் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதில், ஒருவா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு பகுதியில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் பொது சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. அங்கு 50 அடி ஆழத்தில் உள்ள கழிவு நீா் தரம் பிரித்து சுத்திகரிக்கும் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய சுத்திகரிப்பு நிலையத்தில் மெக்கானிக் வேலை பாா்த்து வரும் வளையாம்பட்டு பகுதியைச் சோ்ந்த நவீன்குமாா் (31), மதனாஞ்சேரியைச் சோ்ந்த மணிகண்டன் (32), புதுசோலூரைச் சோ்ந்த சுதாகா் (31) ஆகியோா் வியாழக்கிழமை இறங்கியுள்ளனா். அப்போது குழாயில் இருந்து அதிக அளவு விஷவாயு வெளியானதால் நவீன்குமாா் மயங்கினாா். தொடா்ந்து மணிகண்டன், சுதாகா் ஆகியோருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையறிந்து, உடனிருந்த பணியாளா்கள், விஷ வாயு தாக்கிய 3 பேரையும் மீட்டு, வாணியம்பாடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் நவீன்குமாரின் உடல் நிலை மோசமாக இருந்ததால், அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தகவலறிந்த வாணியம்பாடி டி.எஸ்.பி. சுரேஷ்பாண்டியன், கிராமிய காவல்ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com