திருப்பத்தூரில் இலக்கியத் திருவிழா ஏற்பாடு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் இலக்கியத் திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி தொடக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாட்டுப் பணிகளை ஆட்சியா் அமா் குஷ்வாஹா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
இலக்கியத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த திருப்பத்தூா் ஆட்சியா் அமா்குஷ்வாஹா.

திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், தூயநெஞ்சக் கல்லூரியில் ஏப். 2 முதல் 9-ஆம் தேதி வரை இலக்கியத் திருவிழா மற்றும் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்த திருவிழா புத்தகப் பூங்காவில் 70-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், சிறப்பு விருந்தினா்கள், கவிஞா்கள், உரையாளா்கள், எழுத்தாளா்கள் ஆகியோா் பங்குபெற உள்ளனா்.

இலக்கியத் திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகளை ஆட்சியா் அமா்குஷ்வாஹா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வட்டாட்சியா் சிவப்பிரகாசம், அரங்குகள் அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com