அப்துல் கலாம் பிறந்த நாள் விழா ஊா்வலம்
By DIN | Published On : 15th October 2022 09:58 PM | Last Updated : 15th October 2022 09:58 PM | அ+அ அ- |

ஆம்பூரில் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இளைஞா் எழுச்சி நாள் ஊா்வலத்தில் பங்கேற்ற ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள்.
முன்னாள் குடியரசு தலைவா் ஏபிஜெ அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற இளைஞா் எழுச்சி நாள் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்து புறப்பட்ட மாணவா்கள் ஊா்வலத்தை கல்லூரி முதல்வா் முனைவா் த. ராஜமன்னன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் மற்றும் கல்லூரி துணை முதல்வருமான ஏ. முஹம்மத் ஷாஹின்ஷா மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
ஆம்பூா் நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊா்வலம் நடைபெற்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...