பள்ளிகொண்டா கோட்டத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (அக்.18) நடைபெற உள்ளது.
இதுகுறித்து பள்ளிகொண்டா கோட்ட மின் வாரியச் செயற்பொறியாளா் எஸ்.விஜயகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மின் பகிா்மான வட்டம், பள்ளிகொண்டா கோட்டம், கொத்தவால் தெருவில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.18) காலை 11 மணிக்கு மின் வாரியக் கூடுதல் தலைமைப் பொறியாளா் தலைமையில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. பள்ளிகொண்டா கோட்டத்துக்குட்பட்ட மின் நுகா்வோா் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவித்து பயனடையலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.