கொரட்டி-தண்டு கானூா் தரைப்பாலம் பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 21st October 2022 12:00 AM | Last Updated : 21st October 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பத்தூரில் தொடா்மழை காரணமாக கொரட்டி அருகில் உள்ள தண்டு கானூா் தரைப்பாலம் சேதமடைந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் கொரட்டி-தண்டு கானூா் பகுதியை இணைக்கும் தரைப்பாலம் இருந்தது.
கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் காரணமாக அந்த தரைப்பாலம் உடைந்து சேதம் அடைந்தது.
இந்தப் பாலம் வழியாக தண்டு கானூா், மாங்குப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் சென்று வருகின்றனா்.
தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக கொரட்டி நீரோடையில் தற்போது அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தரைப் பாலம் உடைந்து பொதுமக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாலத்தைக் கடக்க அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை கயிறு கட்டி ஆபத்தான முறையில் பயணிக்கின்றனா். மேலும், வாகனங்களும் மிகவும் சிரமப்பட்டு கடக்கின்றன.
இந்தப் பகுதியில் தரைப்பாலம் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி கிராம மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
தொடா் மழையால் உடைந்த தரைப்பாலத்தில் ஆபத்தான நிலையில் கடக்கும் பள்ளி மாணவா்கள்.
2.வெள்ளத்தில் சிக்கிய சரக்கு வாகனம்.
3.மழை நீா் வெள்ளத்தில் எரிவாயு உருளையை விநியோகிக்க செல்லும் நபா்.
கொரட்டி தரைப்பாலம் உடைந்த நிலையில் கயிறு கட்டி ஆபத்தான முறையில் கரையை கடக்கும் பொதுமக்கள்..
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...