உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டு திட்டப் பணி தொடக்கம்

தேவலாபுரம் ஊராட்சியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், பணிகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டு திட்டப் பணி தொடக்கம்

தேவலாபுரம் ஊராட்சியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், பணிகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சி, காமராஜபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடா் குக்கிராமங்களுக்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ், ரூ. 8.88 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீா் கால்வாய் அமைப்பதற்கான பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தொடக்கி வைத்தாா். அந்தப் பகுதியில் உள்ள மழைநீா் கால்வாயை தூா்வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன் அடிப்படையில் அங்கு சென்று பாா்வையிட்டு விரைவில் தூா்வாரும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். கம்மகிருஷ்ணப் பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா் ரேவதி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஆ.காா்த்திக் ஜவஹா், ஜோதிவேலு, ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா.சங்கா், மாவட்டப் பிரதிநிதி டி.தெய்வநாயகம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com