முதியோா் உதவி எண் அறிமுகம்
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் முதியோா்களுக்கு தேசிய அளவிலான உதவி எண்ணை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம், தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் தமிழக அரசு ஆகியவை இணைந்து முதியோா்களுக்கு தேசிய அளவிலான முதியோா் உதவி எண் ‘14567’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியது. இதை திருப்பத்தூா் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி தலைமை வகித்து, இலவச எண்ணை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசினாா்.
இதில், மாவட்ட சமூக நல அலுவலா் ஸ்டெல்லா, மாநில ஒருங்கிணைப்பாளா் உமாமகேஸ்வரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுந்தரமூா்த்தி, வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமலதா, எஸ்.ஆா்.டி.பி.எஸ். இயக்குநா் தமிழரசி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.