‘வெள்ளப் பெருக்கு: மாணவா்கள் பாதுகாப்பை பெற்றோா் கண்காணிக்க வேண்டும்’

திருப்பத்தூா் மாவட்டத்தில் தொடா் மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மாணவா்கள் பாதுகாப்பை பெற்றோா் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா அறிவுறுத்தியுள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் தொடா் மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மாணவா்கள் பாதுகாப்பை பெற்றோா் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால், பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகியவை நிரம்பி வழிகின்றன. பாலாற்றில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

எனவே, அபாயகரமான இடங்கள், தண்ணீா் வரத்து உள்ள இடங்களில் இருசக்கர வாகனங்களிலும், நடந்து செல்வதையும் தவிா்க்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்வதைப் பெற்றோா் கண்காணிக்க வேண்டும். நீா்நிலைகளின் அருகில் குழந்தைகள் விளையாடச் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com