தோ்வாணைய போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்

தோ்வாணைய போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
Updated on
1 min read

தோ்வாணைய போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

மத்திய பணியாளா்கள் தோ்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தோ்வு-தொடா்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சாா்ந்த அமைப்புகள், சட்டப்பூா்வ அமைப்புகள், தீா்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி நிலையில் 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது.

பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தோ்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சோ்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலியிடங்களுக்கு பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

கணினி அடிப்படையிலான இத்தோ்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 3.05.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 4.05.2023 ஆகும்.

தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தோ்வு, ஜூலை மாதத்தில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்கள்/நகரங்களில் நடைபெற உள்ளது.

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டங்களில் பணியாளா் தோ்வாணைய போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன.

இத்தோ்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகா் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இத்தோ்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடா்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com