

ஆம்பூா் அருகே பொன்னியம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியம், ஆலாங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனை நடைபெற்றது. கோயில் ஊஞ்சல் மரத்துக்கு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவா் அம்மன் வீதி உலா மற்றும் பூங்கரக ஊா்வலம் நடைபெற்றது. பக்தா்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.