விவசாயிகளுக்கு மானிய விலையில் விசை உழுவை இயந்திரம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் விவசாயிகள் மானிய விலையில் விசை உழுவை இயந்திரம் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் விவசாயிகள் மானிய விலையில் விசை உழுவை இயந்திரம் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி 2021-2022 திட்டத்தின் கீழ், கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலா்ச்சி திட்ட கிராமங்களில் விசை உழுவை இயந்திரம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

விசை உழுவை இயந்திரம் வாங்கும் சிறுகுறு/மகளிா்/நஇ/நப விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும் அதிகபட்சமாக ரூ. 85,000 என்ற விதத்தில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பிரிவு சிறு/குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியத் தொகை ஒதுக்கீடு பெற்று, பின்னா் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.

மேற்படி, விவசாயிகள் உதவி செயற்பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை, சிவசக்தி நகா், புதுப்பேட்டை சாலை, திருப்பத்தூா்-635601. தொலைபேசி எண்: 04179-228255 அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்துடன் சிட்டா அடங்கல் சிறு/குறு விவசாயி சான்று மற்றும் ஜாதிச் சான்று ஆகிய ஆவணங்களை இணைத்து சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com