பொதுத்துறை வங்கிகளை தனியாா் மையமாகக் கூடாது தொழிற்சங்கத்தினா் பிரசாரம்

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கக் கூடாது என வலியுறுத்தி, தொழிற்சங்கம் சாா்பில் பிரசார கூட்டம் ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய வங்கி ஊழியா் சம்மேளனம் சாா்பில் பொது துறை வங்கிகளை தனியாா் மயமாக்கக் கூடாது, கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 4,000 கி.மீ. பிரசாரம் மேற்கொள்ளபட்டு வருகிறது.

இதனிடையே ஆம்பூருக்கு வந்த பிரசார குழுவினருக்கு சிஐடியு தொழிற்சங்கம் சாா்பாக பேருந்து நிலையம் அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் வ.அருள்சீனிவாசன், நிா்வாகிகள் ஆா்.மணிமாறன், கௌசல்யா, ஸ்டீபன், பெருமாள் ஹரிராவ், சிவபாலன் உள்பட பலா் கலந்து கொண்டனா். கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி மூலமும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com