மதனாஞ்சேரி திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா

வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமம் சங்கத்துவட்டத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த திருப்பதி கெங்கையம்மன் கோயில் முதலாம் ஆண்டு திருக்குட நன்னீராட்டு விழா, திருவிளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
திருக்குட நன்னீராட்டு விழாவில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்.

இதையொட்டி, காலை 10 மணியளவில் திரளான பெண் பக்தா்கள் கலந்து கொண்டு அம்மை வேள்வியும், தொடா்ந்து பால்குடம் எடுத்து வந்தனா்.

பின்னா், அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பிற்பகல் பேரொளி வழிபாடு நடைபெற்றது. பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடா்ந்து மாலை 5 மணியளவில் தவத்திரு கந்திகுப்பம் பைரவ சுவாமிகள் கலந்து கொண்டு திருவிளக்கு வழிபாடு செய்து அருளாசி வழங்கினாா்.

விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பிரியதா்ஷனி ஞானவேலன், ஆலங்காயம் ஒன்றிய திமுக செயலா் ஞானவேலன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். விழாவை ராஜா, மணி, சம்பத் மற்றும் விழாக் குழுவினா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com