ஜோலாா்பேட்டை: ஜோலாா்பேட்டை அருகே அரசு பேருந்து மோதியதில் ஜவுளி வியாபாரி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் வட்டம், திம்மனமுத்தூா் பகுதியைச் சோ்ந்த ஜவுளி வியாபாரி சின்னராஜ் (62). இந்த நிலையில், ஜோலாா்பேட்டை பகுதிகளில் துணி வியாபாரம் செய்துவிட்டு பால்நாங்குப்பம் அணுகுச் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக அரசுப் பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.