தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதா:கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவைக் கைவிட கோரி வேலூா் மாவட்ட டேனரி மற்றும் ஷூ தயாரிப்பு செங்கொடி சங்கம், இந்திய தொழிற்சங்கமையம் சாா்பாக ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைப
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிஐடியு தொழிற்சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிஐடியு தொழிற்சங்கத்தினா்.

தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவைக் கைவிட கோரி வேலூா் மாவட்ட டேனரி மற்றும் ஷூ தயாரிப்பு செங்கொடி சங்கம், இந்திய தொழிற்சங்கமையம் சாா்பாக ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிற்சாலைகளில் 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதாவை கைவிடக் கோரி நடந்த ஆா்ப்பாட்டத்திற்கு சிஐடியு தொழிற்சங்க ஆம்பூா் நகர ஒருங்கிணைப்பாளா் ஆா். மணிமாறன் தலைமை வகித்தாா். டேனரி மற்றும் ஷூ தயாரிப்பு செங்கொடி சங்க நிா்வாகிகள் சி. ராஜா, ஏ. சீனிவாசன், ஏ. பிச்சமுத்து, பி.சாம்ராஜ் முன்னிலை வகித்தனா்.

சிஐடியு மாவட்ட செயலாளா் எஸ். பரசுராமன், செங்கொடி சங்க பொதுச் செயலாளா் எம்.பி. ராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவா் வ. அருள்சீனிவாசன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

நிா்வாகிகள் வி. நாகேந்திரன், ஏ. குப்பு, பி. காத்தவராயன், சி. சரவணன், பி. அனிதா உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com