100 நாய்களுக்கு இனப்பெருக்க தடை சிகிச்சை

வாணியம்பாடி நகரில் சுற்றித் திரிந்த 100 நாய்களுக்கு இனப்பெருக்க தடை சிகிச்சை செய்யப்பட்டது.

வாணியம்பாடி நகரில் சுற்றித் திரிந்த 100 நாய்களுக்கு இனப்பெருக்க தடை சிகிச்சை செய்யப்பட்டது.

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லையால் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரையில் அவதிக்குள்ளாகினா். மேலும், அதிக அளவில் நாய்கள் பெருகியதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இதையடுத்து நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் முதல் கட்டமாக நகராட்சி மூலம் பிடித்து இனப்பெருக்க தடை சிகிச்சை செய்யப்பட்டது.

சென்னையிலிருந்து கால்நடை மருத்துவா்கள் வரவழைக்கப்பட்டு பிடிப்பட்ட நாய்களுக்கு ஞாயிறு, திங்கள் என இரண்டு நாள்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நகா்மன்றத் தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன், ஆணையா் மாரிசெல்வி, சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் நகராட்சி கவுன்சிலா்கள் பாா்வையிட்டனா். கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்கள் அனைத்தும் 2 நாட்களுக்கு பிறகு பிடிப்பட்ட பகுதிகளில் கொண்டு போய் விடப்படும் என நகாரட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com