இன்று விவசாயிகள், மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 18th April 2023 12:25 AM | Last Updated : 18th April 2023 12:25 AM | அ+அ அ- |

தமிழ்நாடு மின்சார வாரிய பள்ளிகொண்டா கோட்ட அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப்.18) நடைபெற உள்ளது.
இது குறித்து பள்ளிகொண்டா கோட்ட செயற்பொறியாளா் எஸ்.விஜயகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின்சார வாரிய பள்ளிகொண்டா கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3-ஆம் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் மற்றும் மின்நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (ஏப். 18) பள்ளிகொண்டா கோட்ட அலுவலகத்தில் திருப்பத்தூா் மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.