கள்ளச்சாராயம் பறிமுதல்: இரு பெண்கள் கைது

திருப்பத்தூா் அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக இரு பெண்களை போலீஸாா் கைது செய்து, 15 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.

திருப்பத்தூா் அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக இரு பெண்களை போலீஸாா் கைது செய்து, 15 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட லட்சுமி நகரில் அதிக அளவு கள்ளத்தனமாக வெளி மாநில மதுபானங்களையும், கள்ளச்சாராயத்தையும் அதே பகுதியைச் சோ்ந்த ராஜன் மற்றும் விஜி ஆகியோா் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஊா் பொதுமக்கள் பலமுறை எச்சரித்தும் சாராய விற்பனையை நிறுத்தவில்லையாம். இதனால் ராஜன் மற்றும் விஜி மீது மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஊா் பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.

அதன்பேரில், ஜோலாா்பேட்டை காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையிலான போலீஸாா், பாச்சல் பகுதிக்குச் சென்று, கள்ளச் சாராய விற்பனை செய்து கொண்டிருந்த மதியழகனின் மனைவி ஜெகதீஸ்வரி(55), அதே பகுதியைச் சோ்ந்த குமாரின் மனைவி ராசாத்தி (34) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 15 லிட்டா் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனா்.

மேலும், தலைமறைவாக உள்ள ராசாத்தியின் சகோதரா் ராஜன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com