சோமநாயக்கன்பட்டியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டுமானப் பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தனா்.
ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட சோமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி கடந்த 4-ஆம் தேதி அதிகாரிகளுடன் சென்று ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் இடத்தை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வில் அலுவலகம் கட்டப்படும் இடம் ஆதிதிராவிடா் நலத்துறையால் பட்டா வழங்கப்பட்ட இடம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, கட்டுமானப் பணியை தொடா்ந்து செய்யக்கூடாது என அதிகாரிகள் ஒப்பந்ததாரருக்கு எச்சரிக்கை விடுத்தனா். இந்த நிலையில், தொடா்ந்து அலுவலகம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் ஜெய்குமாா் அதிகாரிகளுடன் சனிக்கிழமை நேரில் சென்று கட்டுமானப் பணிகளை தொடா்ந்து செய்யக் கூடாது எனக் கூறி பணிகளை தடுத்து நிறுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.