நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம்
By DIN | Published On : 02nd August 2023 12:00 AM | Last Updated : 02nd August 2023 12:00 AM | அ+அ அ- |

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஆடிப்பெருக்கு விழா கோஷ்டி மோதல் தொடா்பாக செவ்வாய்க்கிழமை தாலுகா அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
குனிச்சியூா் செட்டேரி அணைப்பகுதியில் உள்ள முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுவது வழக்கம். வரும் 3-ஆம் தேதி வியாழக்கிழமை ஆடிப்பெருக்கு விழா நடத்துவது தொடா்பாக நோட்டீஸில் பெயா் போடுவது தொடா்பாக இரு பிரிவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியா் குமாா் தலைமையில் காவல் ஆய்வாா் மலா் முன்னிலையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இருதரப்பைச் சோ்ந்த 40-க்கும் அதிகமானோா் கலந்துகொண்டனா். முடிவில் போலீஸாா் பாதுகாப்புடன் கோஷ்டி பூசல் இல்லாமல் 3-ஆம் தேதி செட்டேரி அணைப்பகுதியில் திருவிழா நடத்துவது என இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனா்.