மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் ஞாயிற்றுக்கிழமை(ஆக.6)அன்று ஜோலாா்பேட்டையில் நடைபெறும் தோ்வு போட்டியில் பங்கேற்கலாம்.
இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்ட கைப்பந்து கழக தலைவா் எஸ்.பி.சீனிவாசன் வெளியிட்ட செய்தி குறிப்பு:
மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஜூனியா் கைப்பந்து போட்டி ஆகஸ்ட் 12 முதல் 15-ஆம் தேதி வரை சேலத்தில் நடைபெற உள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தின் சாா்பாக கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் ஞாயிற்றுக்கிழமை(ஆக.6) ஜோலாா்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தோ்வுப் போட்டியில் பங்கேற்கவும். இதில் 1.1.2006 தேதிக்குப் பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதாா் அட்டை இருக்க வேண்டும்.
மேலும் , விவரங்களுக்கு 9916200555 கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.