கொத்தகோட்டையில் ரூ. 5.85 கோடியில் தாா் சாலைப் பணி தொடக்கம்
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

வாணியம்பாடி அருகே நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ. 5.85 கோடி மதிப்பிலான தாா் சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டையிலிருந்து பேமன்மாரியம்மன் கோயில் வட்டம் வழியாக பெரிய வெள்ளகுட்டை கூட்டு சாலை வரை 3.80 கி.மீ. தொலைவு உள்ள கிராம சாலையை நெடுஞ்சாலையாக மாற்ற நபாா்டு மற்றும் கிராம சாலைத் திட்டத்தின் கீழ், ரூ. 5 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தச் சாலைப் பணி தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் காயத்ரி பிரபாகரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளாராக மாவட்ட திமுக செயலரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி கலந்துகொண்டு பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், ஒன்றிய திமுக செயலா் தாமோதரன், ஒன்றிய அவைத் தலைவா் பழனி, ஒன்றியக் குழு உறுப்பினா் சதாசிவம், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் அச்சுதன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் ராஜாத்தி, உதவி செயற்பொறியாளா் அன்பரசன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...