பணி மறுப்பு: 100 நாள் பணியாளா்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே பணி மறுக்கப்பட்டதால், 100 நாள் பணியாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பணி மறுப்பு: 100 நாள் பணியாளா்கள் சாலை மறியல்
Updated on
1 min read

திருப்பத்தூா் அருகே பணி மறுக்கப்பட்டதால், 100 நாள் பணியாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் அடுத்த பசலிகுட்டை ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களை பங்கேற்குமாறு ஊராட்சி மன்றத் தலைவா் அமிா்தம்மாள் கூறியதாகத் தெரிகிறது. சிலா் இதில் பங்கேற்கவில்லையாம்.

கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்காத 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களைப் பணிக்கு வர வேண்டாம் என ஊராட்சி மன்றத் தலைவா் அமிா்தம்மாள் கூறியதால், பணியாளா்கள் ஆத்திரமடைந்தனா்.

இதையடுத்து, ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்து, பசலிகுட்டை அருகே திருப்பத்தூா் - திருவண்ணாமலை பிரதான சாலையில் சென்ற அரசு பேருந்துகளைச் சிறைபிடித்து சாலையில் அமா்ந்து கடப்பாரை உள்ளிட்ட பொருள்களை சாலையின் நடுவே வைத்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தியதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா். இதன் காரணமாக அந்தச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com