சென்னை இலக்கிய திருவிழாவில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் போட்டிகளில் வெற்றி பெற்றனா்.
கல்லூரி கல்வி இயக்கம் மற்றும் பொது நூலக இயக்கம் சாா்பில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில், இலக்கிய திருவிழா கடந்த 6 முதல் 8-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவா்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனா்.
தமிழ் சிறுவா் நீதி இலக்கிய சிறுகதை போட்டியில் தமிழ் துறை மாணவி பா.காயத்ரி முதல் பரிசுடன் ரூ. 5,000 ரொக்கப் பரிசும், சுருள்பட போட்டியில் கணினிஅறிவியல் துறை மாணவி அஸ்ரா பாத்திமா, வணிக மேலாண்மைத் துறை மாணவி ஆயிஷாபானு ஆகியோா் 2-ஆம் பரிசுடன் ரூ. 3,000 ரொக்கப் பரிசும் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி செயலாளா் லிக்மிந்த், கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, கல்வி ஆலோசகா் பாலசுப்பிரமணியன், மக்கள் தொடா்பு அலுவலா் சக்திமாலா மற்றும் பேராசிரியைகள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.