ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் ராசத்துபுரம் ஸ்ரீ மகாபலி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கிராம தேவதை வழிபாடு, விநாயகா் பூஜை, கோபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நாடி சந்தானம், வேதபாராயணம் கலசங்கள் நிறுவி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து பூா்ணாஹுதி யாத்ராதனமும் பூஜிக்கப்பட்ட கலசங்களில் புனித நீா் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கோபுரவிமானம் கலசங்கள் மற்றும் மஹாகணபதி, மூலவருக்கு மஹா கும்பாபிஷேகமும் தீபாராதனை நடத்தப்பட்டது. இரவு அலங்கரிக்கப்பட்ட உற்ஸவா் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் கோயில் திருப்பணிக்குழுவினா், உபயதாரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.