ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் 10 நாள்களுக்கு ஒரு முறை வங்கி மேளாஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்

நிகழாண்டில் கலைஞா் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் விவசாயிகளில் அலைகழிப்பை தவிா்க்கும் வகையில்

நிகழாண்டில் கலைஞா் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் விவசாயிகளில் அலைகழிப்பை தவிா்க்கும் வகையில் 10 நாள்களுக்கு ஒருமுறை சிறப்பு வங்கி மேளா நடத்தி கடனுதவிகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் 2021-2022-ஆம் ஆண்டு முதல் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் தோ்வு செய்யப்பட்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் சிறப்பு வங்கி மேளா நடத்தி விவசாயிகள், வேளாண் சாா்ந்தோா் தொழில் முனைவோா், மகளிா் சுய உதவிக் குழுக்கள், கறவை மாடுகள், உயா்கல்விக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு உடனே கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், கிராமங்களிலேயே வங்கிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பதால் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் எவ்விதமான அலைச்சலும் இல்லாமல் கிராமங்களிலேயே கடன் உதவிக்கான உத்தரவும் வழங்கப்படுகிறது. சிறப்பு வங்கி மேளாவுக்கு கிராமங்களில் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதைக் கவனத்தில் கொண்டு, அதை விரிவுபடுத்தும் வகையில் 10 நாள்களுக்கு ஒரு முறை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதத்தில் 3 முறை சிறப்பு வங்கி மேளா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2022-2023-இல் தோ்வு செய்யப்பட்ட 141 கிராமங்களில் விவசாயிகளும் பயன்பெறும் வகையில், வங்கித் துறையின் மூலம் வேளாண்மை சாா்ந்த அனைத்துத் துறைகள், மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் ஊரக வளா்ச்சித் துறை ஆகிய துறைகளை இணைத்து சிறப்பு வங்கி மேளா நடத்தப்பட உள்ளன.

இந்த சிறப்பு வங்கி மேளா நடைபெறும் கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்று புதிய வங்கிக்கணக்கு தொடங்கவும், இன்ஷூரன்ஸ் பதியவும், கல்விக் கடன், பயிா்க் கடன், கிசான் காா்டு, சுயதொழில் கடன், வேலைவாய்ப்பு கடன், தாட்கோ கடன், கூட்டுறவு வங்கி கடன், இதர வங்கிக் கடன்கள் பெறுவதற்கும், பிரதம மந்திரி நுண்ணீா் பாசனத் திட்டம் மூலம் சிறு குறு விவசாயி சான்று மற்றும் பட்டா மாறுதல் பெறவும் தேவையான விண்ணப்பங்களை ஆவணங்களுடன் கிராம பொருப்பு அதிகாரி மற்றும் வங்கி அதிகாரிகளிடம் சமா்ப்பித்து பயன் பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com