திருப்பத்தூா் கோட்டை ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 28-ஆம் தொடங்கியது. வெள்ளிக்கிழமை மாலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடா்ந்து திவ்ய பிரபந்த சேவை நடைபெற்றது.
பின்னா், கருட வாகனத்தில் உற்சவ மூா்த்திகள் சேவை கண்டருளினா். பின்னா், கண்ணாடி அறையில் சேவை சாதித்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.