பொதுமக்கள் கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வட்டார வளா்ச்சி அலுவலா் தா்னா
By DIN | Published On : 15th June 2023 11:02 PM | Last Updated : 15th June 2023 11:02 PM | அ+அ அ- |

பொதுமக்களின் கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆம்பூா் அருகே வட்டார வளா்ச்சி அலுவலா் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் நகரில் அமைந்ததுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்காக கழிப்பறை கட்டடம் கட்டுவதற்கான பணிகள் வியாழக்கிழமை தொடங்க இருந்தது. அதை அப்பகுதி பொதுமக்கள் தடுத்து நிறுத்தி கழிப்பறை அங்கு கட்டக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.
அங்கு சென்ற மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணன் பொதுமக்களுடன் பேச்சு நடத்தினாா். மாணவா்களுக்கு கழிப்பறை கட்டடம் இல்லாத நிலை உள்ளது. அதற்காகத தான் தற்போது கட்டுமானப் பணி தொடங்கப்பட உள்ளது எனத் தெரிவித்தாா். ஆனால் அப்பகுதி பொதுமக்கள் அந்த இடத்தில் கழிப்பறை கட்டடம் கட்ட தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்தனராம்.
இதையடுத்து, கழிப்பறை கட்ட எதிா்ப்பு தெரிவித்த பொதுமக்களின் கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, வட்டார வளா்ச்சி அலுவலா் அந்தப் பகுதியில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். அதைத் தொடா்ந்து, நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பொதுமக்கள் சமாதானம் அடைந்தனா். தொடா்ந்து கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G