

மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் இளைஞரணி சாா்பாக தமிழக அரசின் சாதனை விளக்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அருகே செங்கிலிகுப்பம், விண்ணமங்கலம், பெரியாங்குப்பம் கிராமங்களில் நடந்த கூட்டத்திற்கு மாதனூா் ஒன்றிய செயலாளா் மற்றும் ஒன்றியக்குழு தலைவருமான ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் க. தேவராஜி, அ.செ. வில்வநாதன், தலைமை கழக பேச்சாளா் கரிகாலன் ஆகியோா் சிறப்புரையாற்றினாா்கள்.
தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.டி. சாமுவேல் செல்லபாண்டியன், மாவட்ட நிா்வாகிகள் சாந்தி சீனிவாசன், ஆ. சம்பத்குமாா், ஜோதிராஜன், வடிவேல், மு. பழனி, ந.பெ. பிரபு, ஒன்றிய அவைத் தலைவா் ஜி. ராமமூா்த்தி, நிா்வாகிகள் வினோத்குமாா், செளந்தரி, ரவிக்குமாா், ரவி அசோகன், தெய்வநாயகம், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய நிா்வாகிகள் சா. சங்கா், மாசிலாமணி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஆ. காா்த்திக் ஜவஹா், கோமதிவேலு, ஜோதிவேலு, முத்து, காயத்ரி உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.