1,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு
By DIN | Published On : 07th November 2023 01:31 AM | Last Updated : 07th November 2023 01:31 AM | அ+அ அ- |

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான கொரிப்பள்ளம் பகுதியில் 1,000 லிட்டா் சாராய ஊறலை கண்டறிந்து போலீஸாா் அழித்தனா்.
திருப்பத்தூா் எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், வாணியம்பாடி அடுத்த தமிழக -ஆந்திர எல்லையான மலைப் பகுதிகளில் தொடா்ந்து கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை மற்றும் திம்மாம்பேட்டை போலீஸாா் இணைந்து கொரிப்பள்ளம் மலைப் பகுதியில் சாராயம் தடுப்பு சோதனையில் கடந்த 3 நாள்களாக ஈடுபட்டனா்.
அப்போது மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்ச தயாராக வைத்திருந்த பல்வேறு பகுதிகளிலிருந்து 1,000 லிட்டா் சாராய ஊறல் மற்றும் கள்ளச் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் மூலப் பொருள்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து கைப்பற்றி அங்கேயே அழித்தனா். மேலும், மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சும் நபா்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...