திருப்பத்தூா் அடுத்த கொரட்டியில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் அந்தப் பகுதி மக்கள் அவதியடைந்தனா்.
திருப்பத்தூா் அடுத்த கொரட்டி சுற்றுப் பகுதியில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை 5 மணி முதல் சுமாா் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. இடையிடையே நாள் முழுதும் பலமுறை மின் விநியோகம் தடை செய்யப்பட்டதால், அந்தப் பகுதி வணிகா்கள், பொதுமக்கள் அவதியடைந்தனா்.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, மின் மாற்றியில் உள்ள மின் இணைப்பில் பழுது ஏற்பட்டதால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டதாகத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.