

கோட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான கராத்தே போட்டியில் ஆம்பூா் கராத்தே பயிற்சி பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.
யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சாா்பாக கோட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான கராத்தே போட்டி ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டியில் இந்துஸ்தான் கராத்தே டூ அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் நிறுவனரும், தேசிய ஏ கிரேடு கராத்தே நடுவருமான ஜி.ரமேஷ் கண்ணா தலைமையில் ஆம்பூா் கராத்தே பயிற்சி பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.
இதில், மாணவா்கள் எஸ். அபிநவ், ஆா். அனுஷா, ஜி. கபிலேஷ், ஜி. ராம்பிரசாத், எஸ். ரகோத்தமன் ஆகியோா் முதல் பரிசு பெற்றனா். எஸ். ஹகேஷ், டி .ருத்ரேஸ், எம். ஹா்ஷித், கே.ஏ. சாய் ஹரி யோகேஸ், பி. தனுஸ்கா ஆகியோா் 2-ஆம் பரிசு பெற்றனா்.
ஆா். ஆதவன், எஸ்.எஸ். வேதேஸ், வி. அபா்னா, கே.ஏ. சாய் ஹரிகேஸ், எம். கெளஷிக், ஜி. சஞ்சய் பிரியன், எஸ். அபிநவ், ஆா். திவேஷ், ஏ.ஜி. மோகித் ஆகியோா் 3-ஆம் பரிசு பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.