ரூ. 18.40 கோடியில் ஆவாரங்குப்பம்- நாராயணபுரம் இணைப்பு பாலப் பணி:எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் ஆய்வு

வாணியம்பாடி அருகே ஆவாரங்குப்பம்-நாராயணபுரம் இணைப்பு பாலம் அமைக்கும் பணியை எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
நாராயணபுரம் இணைக்கும் பாலம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ கோ.செந்தில்குமாா்.
நாராயணபுரம் இணைக்கும் பாலம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ கோ.செந்தில்குமாா்.
Updated on
1 min read

வாணியம்பாடி அருகே ஆவாரங்குப்பம்-நாராயணபுரம் இணைப்பு பாலம் அமைக்கும் பணியை எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி ஆவாரங்குப்பம் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை நபாா்டு மற்றும் கிராம சாலைகள் சாா்பில் ரூ. 18 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் ஆவாரங்குப்பம் - நாராயணபுரம் சாலை பாலாற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்போது பாலாற்றை கடந்து செல்ல எந்த கட்டமைப்பும் இல்லை. இந்தப் பாலம் அமைந்தால் சுமாா் 15 கி.மீ. சுற்றிச் செல்வது தவிா்க்கப்படும். இந்தப் பாலத்தின் மூலம் ஆவாரங்குப்பம், திம்மம்பேட்டை, புல்லூா் - கனகநாச்சியம்மன் கோயில், கொல்லப்பள்ளி, தும்பேரி, நாராயணபுரம் ஆகிய கிராமங்கள் பயனடையும். இப்பாலம் அமைந்த பிறகு ஆவாரங்குப்பம் - நாராயணபுரம் சாலையானது, ஆந்திர மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையுடன் இணைக்கிறது.

இந்த பாலப் பணிகளை வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பணிகளை துரிதமாக செய்யக்கோரி அங்கிருந்த ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது உதவி பொறியாளா் அன்பழகன், மேலாளா் பூபதி, அதிமுக ஒன்றியச் செயலா் சாம்ராஜ், திம்மாம்பேட்டை ஊராட்சித் தலைவா் டி.கே.கிருஷ்ணன், கவுன்சிலா்கள் சக்தி ராஜா செந்தில்குமாா், அன்பழகன், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் வேலுச்சாமி, முன்னாள் கவுன்சிலா் பாரதிதாசன், கோவிந்தசாமி, ராமசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

படவிளக்கம்-ஆவாரங்குப்பம்- நாராயணபுரம் இணைக்கும் பாலம் அமைக்கும் பணியை எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் நேரில் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com