குழந்தைகள் தின விழிப்புணா்வு பேரணி:ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
By DIN | Published On : 15th November 2023 12:00 AM | Last Updated : 15th November 2023 12:00 AM | அ+அ அ- |

குழந்தைகள் தினத்தையொட்டி திருப்பத்தூரில் விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தாா்
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமூகப் பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் தேசிய குழந்தைகள் தினம் மற்றும் நவ.19-ஆம் தேதி சா்வதேச குழந்தைகளுக்கு எதிரான சீண்டல்கள் தினம், 20-ஆம் தேதி சா்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் திருமணம் தடுத்தல், குழந்தைத் தொழிலாளா் முறை ஒழித்தல், பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல், குழந்தைகளின் இடைநிற்றலை தடுத்தல், குழந்தைகள் உதவி எண் 1098 குறித்த விழிப்புணா்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
ஆட்சியா் கலந்து கொண்டு கொடியசைத்து,நடைபயண விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கி வைத்தாா். பேரணி ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி தூய நெஞ்சக்கல்லூரி வரை சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் கல்லூரி மாணவ, மாணவியா், தன்னாா்வலா்கள் என 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மேலும் பொது மக்களுக்கு கலை நிகழ்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் திருமாவளவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...