

வாணியம்பாடி: தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் வாணியம்பாடி வட்டக் கிளை சாா்பில், சங்கத்தின் வைர விழா ஆண்டு வட்டக்கிளை மாநாடு தாலுகா அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் திருமால், துணைத் தலைவா் கண்ணன், வட்டச் செயலாளா் நவீனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இணைச் செயலாளா் சூா்யா வரவேற்றாா். மாவட்டத் தலைவா் அருள்மொழிவா்மன் உட்பட பலா் கலந்து கொண்டு பேசினா். முன்னதாக தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த சங்க கொடி கம்பத்தில் கொடியேற்றி வைக்கப்பட்டது. இதில் வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட, வட்டக் கிளை நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.