

வாணியம்பாடி: வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் முதுகலை மேலாண்மையியல் ஆய்வு துறையும், புதுதில்லி இந்திய சமூகவியல் ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து நடத்திய 2 நாள் தேசிய கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கல்லூரி தலைவா் விமல்சந்த், செயலாளா் லிக்மிசந்த் தலைமை வகித்தனா். கல்லூரி முதல்வா் இன்பவள்ளி வரவேற்றாா். கருத்தரங்கில் காஞ்சி சங்கரா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ஜெய்சங்கா் நடேச ஐயா் கலந்து கொண்டு, மனித வளத் துறையில் செயற்கை நுண்ணறிவின் சமகாலத் தேவை குறித்து சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து, சென்னை வொ்டிகல் பிராகிரஸ் நிறுவனத்தின் தலைவா் பிரசன்னா வெங்கடேஷ், ஏலகிரி போஸ்கோ மென்பொருள் நிறுவனத்தின் பயிற்சியாளா் வளன், கோயம்புத்தூா் நுண்ணறிவு ஆய்வகத்தின் தலைவா் நவநீத், பெங்களூா் ராமையா மேலாண்மையியல் கல்லூரியின் முதல்வா் சொப்னா ஆகியோா் சிறப்புரையாற்றினா். கருத்தரங்கில் செயற்கை நுண்ணறிவு பற்றி ஆய்வாளா்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மூன்று நூல்களாக வெளியிடப்பட்டன.
இதில், பல்வேறு மாநில, மாவட்டங்களிலிருந்து பேராசிரியா்கள், ஆய்வாளா்கள், மாணவ, மாணவிகள் என 400-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
மக்கள் தொடா்பு அலுவலா் சக்திமாலா, மேலாண்மையியல் துறைத் தலைவா் தீபலட்சுமி, கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளா் வெற்றிவேலன், பேராசிரியைகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.