திருப்பத்தூா்: ஏலகிரி மலையில் ஆயுத பூஜை, விஜய தசமியை முன்னிட்டு தொடா் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி நாட்டினரும் அதிக அளவில் சுற்றுலா வருகின்றனா்.
இங்கு பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளை ரசித்தபடி சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கும்.
இந்த நிலையில், வார விடுமுறை மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை என்பதால், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குடும்பத்தினா், உறவினா்கள் மற்றும் நண்பா்களுடன் ஏலகிரி மலையில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு களித்து மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்ததால், தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் சிரமத்துக்குள்ளாயினா்.
ஏலகிரியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.