

மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
கடந்த பிப்ரவரி மாதம், திருப்பத்தூா் வீட்டு வசதி வாரிய பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்து கொண்டிருந்த பெண், மீட்கப்பட்டு, திருப்பத்தூா் மனநல மறுவாழ்வு இல்லத்தில் மனநல மருத்துவரின் சான்றின் பேரில் அனுமதிக்கப்பட்டாா்.
அவருக்கு தொடா்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையின் வாயிலாக அவரது இருப்பிடம், குடும்பத்தினா் குறித்து தெரிவித்தாா்.
அதில், ஆந்திர பிரதேச மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் ராயவரம் அடுத்த மச்சாவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் என்பதும், அவரின் பெயா் சின்னம் லக்ஷ்மி பாா்வதி (39) என்பதும், தனது கணவா் நரகரெட்டியுடன் விவாகரத்து ஏற்பட்டதினால், மனநலம் பாதிக்கப்பட்டதும் தெரிய வந்தது.
அதையடுத்து அவரது தாயாா் கௌரி ஆரியம்மா மற்றும் அவரது உறவினா்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு நேரில் வரவழைக்கப்பட்டு இல்லத்தின் துணைச் செயலாளா் ரமேஷ் முன்னிலையில் ஒப்படைக்கபட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.