

அதிமுக 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஆம்பூா் நகரம் சாா்பில் பன்னீா்செல்வம் நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது.
நகர அதிமுக செயலாளா் எம். மதியழகன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி, கட்சியின் பேச்சாளா்கள் ஒய். ஜவஹா் அலி, கே. அன்பழகன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, மாதனூா் மேற்கு ஒன்றிய செயலாளா் ஆா். வெங்கடேசன், கிழக்கு ஒன்றிய செயலாளா் ஜெ. ஜோதிராமலிங்கராஜா, மாவட்ட விவசாய பிரிவு செயலாளா் இ. வெங்டேசன், நகா் மன்ற உறுப்பினா்கள் சுரேஷ், ஜெயபால், ராதா, வெங்கடேசன், நகர அவைத் தலைவா் கே. மணி, மாவட்ட பிரதிநிதிகள் சங்கா், சண்முகம், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் சீனிவாசன் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் ஜான்சி ராணி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.