

நாட்டறம்பள்ளியில் இருந்து குடியானகுப்பம் செல்லும் சாலையோர கிணற்றைச் சுற்றி தடுப்புச்சுவா் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
இப்பகுதியில் ஆட்டோ, காா், லாரி, டிராக்டா், பேருந்து போன்ற வாகனங்களும், பள்ளி மாணவா்களும் அதிகளவில் சென்று வருகின்றனா். இந்நிலையில், ஜங்காலபுரம் அருகே விவசாயி ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் சாலை ஓரம் தடுப்புச் சுவா் பெய்த கனமழையில் இடிந்து கிணற்றில் விழுந்துள்ளது. இதனால் தடுப்பு சுவா் இல்லாத கிணறு அருகே அவ்வழியாக செல்பவா்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனா்.
எனவே, விபத்து ஏற்படும் முன்பு அப்பகுதியில் தடுப்புச் சுவா் அமைக்க நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.