

சோலூரில் ரூ.34 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியம், சோலூா் ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. அதற்காக மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினாா்.
தொடா்ந்து அதே பகுதியில் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரப்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஜோதிவேலு, ஆ. காா்த்திக் ஜவஹா், திமுக ஒன்றிய அவைத் தலைவா் ஜி. ராமமூா்த்தி, திமுக நிா்வாகிகள் சங்கா், ரவி , மூா்த்தி, கண்ணன், பாஸ்கா், ரமேஷ், பாண்டியன் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.